ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில் அரசு உதவி பெறும் கால்நடை தங்குமிடத்தைச் சேர்ந்த 78 மாடுகள் உணவு நச்சுத்தன்மையால் உயிரிழந்த சம்பவம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மாநில விலங்கு நலத்துறை சார்பாக கூறுகையில், '' வெள்ளிக்கிழமை மட்டும் 78 மாடுகள் உயிரிழந்துள்ளன. இன்னும் சில மாடுகள் உடல்நிலை சரியில்லாமல் உள்ளது. இந்த மாடுகள் அனைத்தும் உணவு நச்சுத்தன்மையால் உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருந்தும் மாடுகளுக்கு வழங்கப்பட்ட உணவுகளின் மாதிரிகள் சோதனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.