டெல்லி:நாட்டின் 76ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும்விதமாக காங்கிரஸ் சார்பில் டெல்லியில் அமைதி ஊர்வலம் நடந்தது. இதில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அம்பிகா சோனி, குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து காந்தி நினைவிடம் வரை ஊர்வலமாக சென்றனர். அதன்பின் ராகுல் காந்தி கூறுகையில், "இந்தியா 75 ஆண்டுகளுக்கு முன்பே உண்மை மற்றும் அகிம்சையின் வலிமையை உலகத்திற்கு காட்டியுள்ளது.