தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உ.பி.யில் சிலிண்டர் வெடிப்பு: 7 பேர் உயிரிழப்பு - எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

உத்தரப் பிரதேசம்: வஜீர் கஞ்ச் பகுதியில் உள்ள திக்ரி கிராமத்தில் நேற்று (ஜூன் 1) இரவு ஏற்பட்ட எரிவாயு சிலிண்டர் வெடிப்பில் 7 பேர் உயிரிழந்தனர்.

உபியில் சிலிண்டர் வெடிப்பு
உபியில் சிலிண்டர் வெடிப்பு

By

Published : Jun 2, 2021, 10:46 AM IST

கோண்டா மாவட்டம், திக்ரி கிராமத்தில் நேற்றிரவு நூருல் ஹாசன் என்பவரது வீட்டில் சமைக்கும்போது எரிவாயு சிலிண்டர் வெடிப்பு ஏற்பட்டது. வெடிப்பின் தாக்கம் பெருமளவில் இருந்ததால் அருகில் உள்ள இரண்டு வீடுகள் இடிந்து விழுந்தன.

உ.பி.யில் சிலிண்டர் வெடிப்பு

இச்சம்பவத்தில், 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருவதாக எஸ்.பி. சந்தோஷ் குமார் மிஸ்ரா தெரிவித்தார்.

மேலும், இந்தச் சம்பவம் குறித்து அறிந்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வருத்தம் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:புதுச்சேரி நியமன எம்எல்ஏக்கள் வழக்கு: இன்று தீர்ப்பு

ABOUT THE AUTHOR

...view details