தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ராகுல்காந்தி நடைபயணத்திற்கு சர்வ வசதிகளுடன் 60 கேரவன்கள் கன்னியாகுமரிக்கு வருகை - கேரவன்கள்

காங் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து நாளை நடைப்பயணம் துவங்க உள்ள நிலையில் அவருக்கும் அவருடன் நடைப்பயணம் மேற்கொள்ளும் காங் நிர்வாகிகள் தங்குவதற்கு படுக்கையறை, சமையலறை வசதியுடன் 60 கேரவன்கள் கன்னியாகுமரிக்கு வந்துள்ளது.

ராகுல்காந்தி நடைபயணத்திற்கு சர்வ வசதிகளுடன் 60 கேரவன்கள் கன்னியாகுமரிக்கு வருகை
ராகுல்காந்தி நடைபயணத்திற்கு சர்வ வசதிகளுடன் 60 கேரவன்கள் கன்னியாகுமரிக்கு வருகை

By

Published : Sep 6, 2022, 11:20 AM IST

கன்னியாகுமரி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை தேச ஒற்றுமை பயணம் என்ற நடைப்பயணத்தை நாளை மேற்கொள்கிறார். கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபம் முன்பு இருந்து அவர் தனது நடைபயணத்தை தொடங்குகிறார்.

இந்த நடைபயணத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தேசிய கொடியை அவரிடம் வழங்கி தொடங்கி வைக்கிறார். இதனை தொடர்ந்து ராகுல் காந்தி கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட பந்தலுக்கு நடந்தே செல்கிறார். அங்கு மாலை நடைபெறும் பொது கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். அதன் பிறகு அவர் நடை பயணத்தை தொடங்குகிறார்.

ராகுல்காந்தி நடைபயணத்திற்கு சர்வ வசதிகளுடன் 60 கேரவன்கள் கன்னியாகுமரிக்கு வருகை

இரவு அகஸ்தீஸ்வரம் பகுதியில் அமைந்துள்ள விவேகானந்தா கலை கல்லூரியில் தங்குகிறார். ராகுல் காந்தியும் அவருடன் நடைப்பயணம் செல்லும் காங்கிரஸ் முக்கிய தலைவர்களும் தங்குவதற்காக படுக்கையறை, சமையலறை, குளியலறை, கழிவறை மற்றும் அனைத்து வசதிகள் கொண்ட குளுகுளு வசதியுடன் கூடிய கேரவன்கள் பயன்படுத்தப்படுகிறது.

இதற்காக 60 கேரவன்கள் கன்னியாகுமரிக்கு வந்து உள்ளன . இந்த 60 கேரவன்கள் ராகுல் காந்தி நடைப்பயணம் செல்லும் போது அவர்களை பின் தொடர்ந்து செல்லும். தினந்தோறும் இரவு ராகுல் காந்தியும் நடைப்பயணம் செல்லும் குழுவினரும் எங்கு தங்குகிறார்களோ அந்த இடத்தில் இந்த கேரவன்கள் நிறுத்தி வைக்கப்படும் என காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தார்கள்.

இதையும் படிங்க:செப்டம்பர் 8 அன்று பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட டெல்லி சென்ட்ரல் விஸ்தா அவன்யூ திறக்கிறார்

ABOUT THE AUTHOR

...view details