தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட 6 வயது சிறுமி - உடலை எரிக்க முயன்றார்களா காவல் துறையினர்? - Child raped in Uttar Pradesh

லக்னோ( உத்தரப்பிரதேசம்): ஆறு வயது சிறுமி ஒருவர் கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் உடலை அனுமதியின்றி காவல் துறையினர் தகனம் செய்ய முயற்சித்ததாக பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர்.

பாலியல் வன்புணர்வுக்கு ஆளான 6 வயது சிறுமி -  போலீசார் சதி?
பாலியல் வன்புணர்வுக்கு ஆளான 6 வயது சிறுமி - போலீசார் சதி?

By

Published : Nov 9, 2020, 8:29 AM IST

Updated : Nov 9, 2020, 10:00 AM IST

உத்தரப்பிரதேச மாநிலம், பிலிபிட் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் கடந்த 6ஆம் தேதி, '6 வயது சிறுமியைக் காணவில்லை' என்று அவரது பெற்றோர் மதோ தாண்டா காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

இந்நிலையில் மறுநாள் (நவம்பர் 7), அக்கிராமத்தில் உள்ள கரும்புத்தோட்டத்தில், கழுத்துப் பகுதியில் காயங்களுடன் சிறுமி சடலமாக கிடந்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், சிறுமியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

உ.பி.,யில் தொடரும் வன்கொடுமை சம்பவங்கள்: பாலியல் வன்புணர்வுக்குள்ளான 13 வயது சிறுமி

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஜெய்பிரகாஷ் யாதவ், "சிறுமியை கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்து, கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளனர்" என்று உடற்கூராய்வு அறிக்கையின் அடிப்படையில் தெரிவித்தார்.

இதையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், சம்பவ இடத்தில் இருந்த செருப்பு அவருடையது என்பது உறுதியானது.

"ஹத்ராஸ் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை அப்பாவிகள் என நிரூபிக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்"

இதற்கிடையில், முன்னாள் மாநில அமைச்சர் ஹேம்ராஜ் வர்மா சிறுமியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது சிறுமியின் உடலை பெற்றோரின் அனுமதியின்றி வலுக்கட்டாயமாக தகனம் செய்ய காவல் துறையினர் முயற்சித்ததாக பெற்றோர் புகாரளித்தனர்.

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமைச் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திவரும் நிலையில், தொடர்ச்சியாக அம்மாநிலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

Last Updated : Nov 9, 2020, 10:00 AM IST

ABOUT THE AUTHOR

...view details