தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சென்னையில் பொது இடங்களில் குப்பை கழிவுகளை கொட்டியவர்களுக்கு ரூ.6.99 லட்சம் அபராதம் வசூல்

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 14 நாட்களில் பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமான கழிவுகளை கொட்டிய நபர்களுக்கும், சுவரொட்டிகள் ஒட்டிய நபர்களுக்கும் மொத்தம் ரூ.6.99 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

sdgf
dv

By

Published : Apr 6, 2022, 2:25 PM IST

சென்னை மாநகராட்சி சார்பில்மாநகரை தூய்மையாகவும் அழகுடன் பராமரிக்க சிங்கார சென்னை 2.0 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின்கீழ் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை மாநகரில் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மற்றும் வரையப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு அவ்விடங்களில் தமிழ்நாட்டின் கலாச்சாரத்தையும், வரலாற்று சிறப்புகளையும் குறிக்கும் வகையிலான வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு அழகுபடுத்தப்பட்டு வருகின்றன.

அரசு, மாநகராட்சி கட்டடங்கள் மற்றும் பொது இடங்களில் விதிமீறி சுவரொட்டி ஒட்டும் நபர்களுக்கு மாநகராட்சியின் சார்பில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. கடந்த 14 நாட்களில் ரூ.50,200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.மேலும் சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்ணம துணை விதிகள் 201ன்படி பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, கடந்த மாதம் 20 ஆம் தேதி முதல் நேற்று வரை பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் குப்பைகளை கொட்டிய நபர்களுக்கு ரூ.2,85,400, அபராதமும், கட்டுமான கழிவுகளை கொட்டிய நபர்களுக்கு ரூ.383,750 அபராதமும் மாநகராட்சி சார்பில் விதிக்கப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 14 நாட்களில் பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமான கழிவுகளை கொட்டிய நபர்களுக்கும் சுவரொட்டிகள் ஓட்டிய நபர்களுக்கும் ரூ, 6:99,350 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்க முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும், மீறும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது.

இதையும் படிங்க :சென்னை மாமன்ற கூட்டம் வரும் 9ஆம் தேதி கூடுகிறது

ABOUT THE AUTHOR

...view details