தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இத்தனை லட்சம் கோடியா...? விண்ணை முட்டும் 5G ஏலத்தொகை...

இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை ஏலம் நான்காவது நாளாக நடந்துவருகிறது. இதுவரை ரூ.1,49,623 கோடிக்கு ஏலத்தொகை சென்றுள்ளது.

5g-spectrum-auction-enters-day-4-bids-worth-rs-1-dot-49-lakh-cr-received-so-far
5g-spectrum-auction-enters-day-4-bids-worth-rs-1-dot-49-lakh-cr-received-so-far

By

Published : Jul 29, 2022, 12:26 PM IST

டெல்லி: அதிவேக இணையச் சேவைகளுக்கான 5ஜி அலைக்கற்றை ஏலம் ஜூலை 26ஆம் தேதி தொடங்கியது. இதில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, சுனில் மிட்டலின் பாரதி ஏர்டெல், வோடபோன் ஐடியா, கவுதம் அதானியின் அதானி எண்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

நான்கு நாள்களாக தொடர்ந்துவரும் இந்த ஏலத்தில் 16 சுற்றுகள் முடிந்துள்ளன. முதல் நாளிலேயே ஏலத்தொகை ரூ. 1.45 லட்சம் கோடியை எட்டியிருந்தது. தொடர்ந்து இன்று (ஜூலை 29) ரூ.1,49,623 கோடிக்கு ஏலத்தொகை சென்றுள்ளது. குறிப்பாக உத்தரப் பிரதேச கிழக்கு வட்டத்தில் 1,800 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசைக்காக அதிகத்தொகை கொடுக்க நான்கு நிறுவனங்களுக்கும் இடையே கடும்போட்டி நிலவிவருகிறது.

இந்த ஏலம் குறைந்த அதிர்வெண், நடுத்தர அதிர்வெண், உயர் அதிர்வெண் என்று மூன்று வகைகளில் நடத்தப்படுகிறது.

  • 5ஜி சேவையில் குறைந்தபட்ச வேக இணையத்தொடர்பிற்காக 600, 700, 800, 900, 1,800, 2,100, 2,300 மெகாஹெர்ட்ஸ் அதிர்வெண் வகை ஏலம்
  • 5ஜி சேவையில் நடுத்தர வேக இணையத்தொடர்பிற்காக 3,000 மெகாஹெர்ட்ஸ் அதிர்வெண் ஏலம்.
  • 5ஜி சேவையில் உயர் வேக இணையத்தொடர்பிற்காக 26 ஜிகாஹெர்ட்ஸ் அதிர்வெண் ஏலம்.

இந்த சேவைகள் 4ஜியை விட 10 மடங்கு பதிவிறக்கத்திலும், பஃபரிங்கிலும் அதிகமாக செயல்படும். முழு நீள உயர்தர வீடியோக்களை கூட சில நொடிகளில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். குறிப்பாக இந்த சேவை 5 முதல் 7 வரையிலான தலைமுறை வாகனங்கள் இணைப்பு, ஆக்மென்ட் ரியாலிட்டி, மெட்டாவர்ஸ், கிளவுட், கேமிங் உள்ளிட்டவையில் சிறந்த அனுபவத்தை கொடுக்கும்.

இதையும் படிங்க:5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் - அதிக வாய்ப்பு யாருக்கு?

ABOUT THE AUTHOR

...view details