தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து மாடியிலிருந்து தூக்கி வீசிய நபர் கைது! - உன்னாவ்

ஐந்து வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, மாடியில் இருந்து தூக்கி வீசிய நபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

unnao
unnao

By

Published : May 27, 2022, 9:57 PM IST

உத்தரபிரதேசம்: உன்னாவ் மாவட்டத்தில், ஹசன்கஞ்ச் கோட்வாலி பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த குட்டு என்ற நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பிறகு அந்தச் சிறுமியை மொட்டை மாடியிலிருந்து தூக்கி வீசியுள்ளார்.

சிறுமி இறந்துவிடுவார் என நினைத்து அந்த நபர் சென்றுவிட்டதாக தெரிகிறது. ஆனால் சிறுமி இறக்கவில்லை. சிறுமியை படுகாயங்களுடன் மீட்ட அப்பகுதி மக்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறுமியின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிகிறது.

இதுதொடர்பாக சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ், வழக்குப்பதிவு செய்த போலீசார், பாலியல் வன்கொடுமை செய்த குட்டுவை கைது செய்தனர்.

இதையும் படிங்க:மீனவப்பெண் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொலை.. ஒடிசாவைச் சேர்ந்த 2 பேர் கைது...

ABOUT THE AUTHOR

...view details