மேற்கு வங்கத்தின் அசன்சோலில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் என்ற பகுதிக்கு அவசர ஊர்தி மூலம் இன்று (ஜன.26) காலை உயிரிழந்த நபரை ஏற்றிக்கொண்டு அவரது உறவினர் நான்கு பேர் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது, உத்தரப் பிரதேச மாநிலம் படோஹி மாவட்டத்தின் வழியாக சென்றுகொண்டிருந்த அவசர ஊரதி எதிர்பாராத விதமாக சாலையில் நின்றுகொண்டிருந்த சரக்கு லாரியின் மீது மோதியது.
இந்த விபத்தில் அப்பளம் போல் நொறுங்கிய அவசர ஊரதியில் இருந்த வாகன ஓட்டுநர் உள்ளிட்ட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், அதிவேகமாக வந்த அவசர ஊரதி பனிமூட்டம் காரணமாக சாலையில் இருந்த லாரியை கவனிக்காமல் அதில் மோதி விபத்துக்குள்ளது தெரியவந்தது.
இதையும் படிங்க: புளியமரத்தில் மோதி கார் தீ விபத்து: ஒருவர் உயிரிழப்பு!