கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்திலுள்ள ஹாருகோப்பா கிராமத்தில் ஈரப்பா பாசப்பா சங்கண்ணவர் (35) என்பவர் சொத்து பிரச்னையில் மாருதி வீரேஷா என்ற நான்கு வயது சிறுவனை கொலை செய்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
சொத்து பிரச்னையில் 4 வயது சிறுவன் கொலை - பெலகாவியில் 4 வயது சிறுவன் கொலை
பெங்களூரு: சொத்து விவகாரத்தில் 4 வயது சிறுவனை கொடூரமாக கொன்ற நபர் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
4 வயது சிறுவன் கொலை
குற்றஞ்சாட்டப்பட்ட ஈரப்பாவின் தந்தையும், சிறுவனின் தாத்தாவும் உடன்பிறந்தவர்கள். ஈரப்பாவிற்கும் கொலையான சிறுவனின் தாத்தாவுக்கும் இடையில் சொத்து தகராறு இருந்துள்ளது. சொத்து முழுவதும் சிறுவனுடைய தாத்தாவின் பெயரில் இருந்துள்ளது. அதனால் சிறுவனை ஈரப்பா கொன்றிருக்கலாம் என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க:குடிபோதையில் தாயை பற்றி அவதூறு பேச்சு: நண்பரின் கண்ணை நோண்டி எடுத்த இளைஞர்!