டெல்லி:அக்னிபத் ராணுவ ஆள்சேர்ப்பு திட்டம் குறித்து போலியான செய்திகளை பரப்பியாதாக 35 வாட்ஸ்அப் குழுக்களை நேற்று (ஜூன் 19) மத்திய அரசு தடை செய்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட இத்திட்டத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறை எழுந்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தக் குழுக்களைப் பற்றிய தகவல் அல்லது அவற்றின் நிர்வாகிகளுக்கு(அட்மின்) எதிராக ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது குறித்து தகவல் வெளியிடவில்லை. சமூக வலைதளம் மூலம் போலி தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.