புதுடெல்லி: ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், சென்ற மாதம் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்றப்ப 11 நேபாள நாட்டவர் உள்ளிட்ட 35 நபர்கள் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்துறையின் பாதுகாப்பு மையத்தில் 14 நாள்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட 113 நபர்கள் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக ஐடிபிபி செய்தித் தொடர்பாளர் விவேக் குமார் பாண்டே கூறினார்.
இந்தோ-திபெத்திய எல்லையில் தனிமைப்படுத்துதல்
கரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கு 14 நாள்கள் தனிமைப்படுத்துதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிதை அடுத்து அங்கிருந்து தொடர்ந்து மீட்கப்பட்டு இந்தியா அழைத்துவரப்படுபவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். அதன்படி, இந்தோ- திபெத்திய எல்லைக் காவல்துறையின் பாதுகாப்பு மையத்தில் இவர்கள் கட்டாயமாக தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இங்கு தனிமைப்படுத்தப்பட்ட நேபாளத்தைச் சேர்ந்த 24 இந்தியர்களும் 11 நேபாள நாட்டவரும் முன்னதாக விடுவிக்கப்பட்டனர். இதேபோல், நேற்று முன் தினம் (செப்.07), 53 ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள் உள்பட 78 பேர், தனிமைப்படுத்தப்பட்ட காலத்திற்குப் பிறகு ஆர்டி பிசிஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு பின் விடுவிக்கப்பட்டனர்.