பூஞ்ச் : இந்திய ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் மூன்று வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஜம்மு காஷ்மீர், பூஞ்ச் மாவட்டம் அடுத்த தனமந்தி எல்லைப் பகுதியில் சென்று கொண்டு இருந்த இந்திய ராணுவத்தின் ஜிப்ஸி மற்றும் டிரக் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தாக்குதலில் இந்திய ராணுவத்தின் மூன்று வீரர்கள் வீரமரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் 3 வீரர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. உளவுத் துறையின் தகவலை அடுத்து சம்பவ பகுதியில் கூட்டு ஆபரேஷன் நடத்தப்பட்டதாகவும் அதன் தொடர்ச்சியாக இன்று (டிச. 21) மாலை பாதுகாப்பு படை வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதாகவும் இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சம்பவ இடத்திற்கு கூடுதல் பாதுகாப்பு படைகள் வரவழைக்கப்பட்டு உள்ளதாகவும், பயங்கரவாதிகள் இருப்பிடம் கண்டறியப்பட்டு பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகவும் இந்திய ராணுவம் தரப்பில் தகவல் கூறப்பட்டு உள்ளது. பயங்கரவாதிகளின் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் பெயர்கள் உள்ளிட்ட தகவல்கள் இந்திய ராணுவம் தரப்பில் வெளியிடப்படவில்லை. ராணுவ வாகனத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது, தரையில் வீரர்களின் ஹெல்மட், ரத்தம் படிந்த சாலை உள்ளிட்ட காணொலி சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
இதையும் படிங்க :இந்திய ராணுவ வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு! வீரர்கள் உயிரிழப்பு? என்ன நடந்தது?