தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கோயில் நிகழ்ச்சியில் பங்கேற்ற 3 பக்தர்கள் வெப்ப அலையால் உயிரிழப்பு! - வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம்

பனிஹாட்டி இஸ்கான் கோயிலில் நடைபெற்ற உற்சவத்தில் கலந்து கொண்ட 3 பக்தர்கள் கூட்ட நெரிசல் காரணமாகவும், வெப்பத்தின் தாக்கம் காரணமாகவும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தனர்.

West Bengal
West Bengal

By

Published : Jun 12, 2022, 10:01 PM IST

மேற்குவங்கம்: மேற்குவங்க மாநிலம், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில், பனிஹாட்டி பகுதியில் உள்ள இஸ்கான் கோயிலில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற மகா உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்ட ஏராளமான பக்தர்கள் வெயிலின் தாக்கம் காரணமாகவும், கூட்ட நெரிசல் காரணமாகவும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அதில் மூவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்கள் மூவரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனத்தெரியவந்துள்ளது. மேலும் 15-க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த தவறியதால்தான் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாகப் பக்தர்கள் குற்றம்சாட்டினர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கர்நாடகாவில் 'கழுதைப்பண்ணை' திறப்பு!

ABOUT THE AUTHOR

...view details