புதுச்சேரி: புதுச்சேரி பாஜக மாநில தலைவர் சுவாமிநாதன் இன்று அக்கட்சியின் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, புதுச்சேரியில் மூன்று நியமன எம்எல்ஏவிற்கு வாக்களிக்க உரிமை இல்லை என முதலமைச்சர் நாராயணசாமி கூறியதற்கு பதில் அளித்த அவர், 3 நியமன எம்எல்ஏக்களுக்கு வாக்களிக்க உரிமை உள்ளதென தெளிவாக நீதிமன்றம் கூறியுள்ளது. எனவே, நாங்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்போம் என்றார்.
புதுச்சேரியில் மேலும் மூவர் பதவி விலகத் தயார்; பாஜக சுவாமிநாதன் தகவல்! - பாஜக சுவாமிநாதன்
புதுச்சேரி காங்கிரஸ் கட்சியிலிருந்து மேலும் மூன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பதவி விலகுவர் என பாஜக தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் மேலும் மூவர் பதவி விலகத் தயார்; பாஜக சுவாமிநாதன் தகவல்!
முதலமைச்சர் நாராயணசாமி எப்போதும் எதிர்க்கட்சியின் மீது குறைகூறிவருவது வாடிக்கைதான் எனக் கூறிய அவர், நாராயணசாமி மீதுள்ள அதிருப்தியில் மேலும் மூன்று காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியில் இருந்து விலக தயாராக உள்ளனர் என்றும், பிப்ரவரி 25ஆம் தேதி புதுச்சேரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மோடி புதுச்சேரி வருகை தருகிறார் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:நம்பிக்கை வாக்கெடுப்பில் 3 நியமன உறுப்பினர்கள்...! - நாராயணசாமி கருத்து