தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வீட்டோட மாப்பிள்ளையா வரேன்... 28 வயதில் 24 பெண்களுடன் திருமணம்... சிக்கிய பெங்கால் பிளே பாய்... - பலதரப்பட்ட வேலைகள் செய்வதாக கூறி ஏமாற்றியுள்ளார்

மேற்கு வங்கத்தில் பல்வேறு போலி பெயர்களுடன் 24 பெண்களை திருமணம் செய்து அவர்களது நகைகளை கொள்ளையடித்து தப்பிய 28 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார்.

Etv Bharat28 வயதில் 24 பெண்களை மணந்த மோசடி இளைஞர் கைது
Etv Bharat28 வயதில் 24 பெண்களை மணந்த மோசடி இளைஞர் கைது

By

Published : Oct 1, 2022, 5:30 PM IST

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் இளைஞர் ஒருவர் இளம்பெண்களை திருமணம் செய்துவிட்டு, ஓரிரு நாள்களில் அவர்களின் நகைகளுடன் தலைமறைவாகி வருவதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. குறிப்பாக சாகர்திகி காவல் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் தன்னை மோதிலால் என்பவர் திருமணம் செய்துவிட்டு ஏமாற்றியதாகவும், தனது நகைகளை கொள்ளையடித்து சென்றதாகவும் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

இதனிடையே பல நாட்களாக செயல்படாமலிருந்த அந்த இளைஞரின் செல்போன் எண் திடீரென செயல்பட்டுள்ளது. இதனை உடனே பயன்படுத்திக்கொண்ட போலீசார் செல்போன் டவர் மூலம் டிராக் செய்து அந்த இளைஞனை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவரது பெயர் அசாபுல் மொல்லா என்பதும் 28 வயதில் 24 திருமணம் செய்துவந்ததும் தெரியவந்தது.

குறிப்பாக மேற்கு வங்க மாநிலத்தின் பல மாவட்டங்களில் பல பெண்களிடம் நட்பாக பழகி திருமணம் செய்துகொண்டுள்ளார். சில பெண்களிடம் தான் அனாதை என்றும், வீட்டை விட்டு ஓடி வந்ததாகவும் கூறி அவர்களது வீட்டிலேயே தங்கியுள்ளார். அதன்பின் சில நாள்களுக்கு பின் நகைகளுடன் தப்பித்து வேறு பெண்ணை திருமணம் செய்யும் திட்டத்தில் இறங்கிவந்துள்ளார். அதற்காக அவர் போலி ஆதார் அட்டையை உருவாக்கி பயன்படுத்தியுள்ளார். மேற்கு வங்கம் மட்டுமல்லாமல் பிகாரிலும் பல பெண்களை திருமணம் செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க:புதையல் ஆசையில் விவசாயி நரபலி... வாட்ச்மேன் கொடுத்த பகீர் வாக்குமூலம்....

ABOUT THE AUTHOR

...view details