தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உத்தரகாண்டில் 10 நாளில் 28 யாத்ரீகர்கள் உயிரிழப்பு - pilgrims died in chardham yatra

உத்தரகாண்ட் மாநிலத்தில் கேதர்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட கோயிலுக்கு சர்தம் யாத்திரை சென்ற 28 யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளனர். யாத்திரையில் உயிரிழப்புளை தடுக்க மாநிலத்தின் சார்பில் பேரிடர் மீட்புக் குழுவினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

உத்தரகாண்டில் 10 நாளில் 28 யாத்ரீகர்கள் உயிரிழப்பு- NDRF உதவிக்கரம்!
உத்தரகாண்டில் 10 நாளில் 28 யாத்ரீகர்கள் உயிரிழப்பு- NDRF உதவிக்கரம்!

By

Published : May 13, 2022, 10:19 AM IST

டேராடூன்(உத்தரகாண்ட்):உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட கோயில்களில் ் சர்தம் யாத்திரை சென்ற 28 யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் இறந்தவர்களில் பெரும்பாலும் இருதய கோளாறு, ரத்தக்கொதிப்பு ஆகிய பாதிப்பால் இறந்துள்ளதால் தேசிய பேரிடர் மீட்பு படையினரை டேராடூன் மலைப்பகுதியில் பணியமர்த்தியுள்ளது.

இது குறித்து உத்தரகாண்ட்டின் தலைமை செயலாளர் எஸ்.எஸ்.சந்து கூறுகையில், ‘ உத்தரகாண்ட்டில் முதல்முறையாக தேசிய பேரிடர் மீட்பு படை (NDRF )குழுவின் உதவியை நாடியுள்ளோம். NDRF படையினருக்கு உதவியாக ராணுவத்தினரும் பணியாற்ற உள்ளனர். கேதார்நாத் வழித்தடத்தில் NDRF படை பயன்படுத்தப்பட உள்ளது. ஒரு நாளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் யாத்திரையில் பங்கேற்பதால் அரசு தலையிட வேண்டி உள்ளது’ என தெரிவித்துள்ளார்.

இறந்தவர்களின் புள்ளிவிவரங்கள்படி, 30 முதல் 40 வயதுடைய 3 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். இதேபோல், 40 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 50 வயதுக்குட்பட்ட 4 யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளனர். 50 முதல் 60 வயது வரையிலான எட்டு பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். அதேசமயம் 76 வயதுக்குட்பட்ட 13 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலான மரணங்கள் யமுனோத்ரி நடைபாதையில் நடந்துள்ளதாக தரவுகள் தெரிவித்துள்ளன.

உத்தரகாண்ட் அரசின் யாத்திரிகைக்கான முன்னெடுப்பு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாதே இந்த உயிரிழப்பிற்கு காரணம் என பக்தர்கள் கூறுகின்றனர். மேலும் யாத்ரீகர் ஒருவர் கூறுகையில், ‘கேதார்நாத் செல்லும் சாலையில் மக்கள் நடக்க கூட வழியில்லை. குதிரைகளும், கோவேறு கழுதைகளும் செல்கின்றனர். பாதசாரிகள் இடமின்றி தவிக்கின்றனர்’ என கூறியுள்ளார்.

பாத யாத்திரையின் போது உடல்நிலை பாதிக்கப்படுவோர் போதிய சிகிச்சை இல்லாமலே உயிரிழப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே இது குறித்து ஆலோசனை நடத்த உத்தரகாண்ட் அரசு திட்டமிட்டுள்ளது.

இதையும் படிங்க:நேற்று கேதர்நாத்; நாளை பத்ரிநாத்; ஆறு மாதத்திற்கு பின் கோயில்கள் திறப்பு!

ABOUT THE AUTHOR

...view details