கரோனா பரவலும் அதைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கமும் இந்தியாவின் குழந்தைகளை எவ்வாறு பாதித்துள்ளது என்ற ஆய்வறிக்கை யுனிசெஃப் (UNICEF) அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் நான்கில் ஒரு குழந்தைக்குத்தான் ஆன்லைன் கல்விக்கான சாத்தியங்கள் உள்ளன.
குறிப்பாக இந்தியாவில் கிராமப்புறங்களில் உள்ள குழந்தைகளின் கல்வி நிலைமை நகர்ப்புறங்களை ஒப்பிடும்போது மிகவும் பின்தங்கியுள்ளது. இதன் காரணமாக, நாடு முழுவதும் 2.47 கோடி குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பெற முடியாத சூழலில் உள்ளனர்.