டெல்லி:சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, பிரான்ஸ் மற்றும் பிரேசில் போன்ற நாடுகளில் கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துவருகிறது. உலக நாடுகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்திவருகின்றன. இதனிடையே டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் கரோனா தொற்றுக்கு எதிரான முழுமையான சுகாதாரப் பராமரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 220 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன - ஜோதிராதித்ய சிந்தியா - கரோனா பரவல் குறித்து சிந்தியா
இந்தியா முழுவதும் 220 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.
'ஒரே நாடு ஒரே ஆரோக்கியம்' என்ற என்னும் தொலைநோக்கு திட்டத்தின்படி கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம். நாடு முழுவதும் டிசம்பர் 19ஆம் தேதி வகையில் 220 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்படுள்ளன. போக்குவரத்தற்ற தொலைதூரப் பகுதிகளிலும் ரத்தம், தடுப்பூசி மற்றும் மருந்து விநியோகத்திற்கு ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. சுகாதார உள்கட்டமைப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 2014ஆம் ஆண்டுக்கு முன்பு 6 எய்ம்ஸ் மருத்துவமனைகள் மட்டுமே இருந்தன. ஆனால், இன்று 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் உள்ளன. எம்பிபிஎஸ் இடங்கள் 90 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மன்சுக் மாண்டவியா ஆலோசனை