மரபியல் மாற்றமடைந்த உருமாறிய கரோனா வைரஸால் இந்தியாவில் புதிதாக 20 பேர் இன்று பாதிக்கப்பட்டதாகவும், இதனால் உருமாறிய கரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 58ஆக உயர்ந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை கூறுகையில், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சுகாதாரப் பணியாளர்கள் அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் விவரம் குறித்து தகவலும் சேகரிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளது.
மேலும், நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் விவரம் குறித்து தகவல்களை சேகரிக்கவும் மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.