தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நட்டநடு இரவில் என்கவுன்டர்...மூன்று பயங்கரவாதிகள் படுகொலை! - பயங்கரவாதிகள் படுகொலை

ஸ்ரீநகர்: காஷ்மீரில் நடைபெற்ற என்கவுன்டரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

காஷ்மீர்
காஷ்மீர்

By

Published : Apr 11, 2021, 12:28 PM IST

காஷ்மீர், சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக காவல் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின்பேரில், காஷ்மீர் காவல் துறையும், பாதுகாப்புப் படையினரும் அப்பகுதியில் நேற்று (ஏப்.10) இரவு சோதனை மேற்கொண்டனர். அப்போது நடைபெற்ற என்கவுன்டரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அதுமட்டுமின்றி, இரண்டு பாதுகாப்புப் படையினர் படுகாயம் அடைந்தனர். பதாமி பாக் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த பயங்கரவாதிகள் அல்-பத்ரே என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களின் பெயர் ஃபருக் அகமது, ஃபைசல் குல்சார், ஆசிப் பஷீர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து காஷ்மீர் காவல்துறை இயக்குநர் விஜய் குமார் கூறுகையில், "உயிரிழந்தவரில் ஒருவர் பயங்கரவாத அமைப்பில் புதிதாகச் சேர்ந்தவர். அவரை சரணடையச் செய்ய நாங்கள் உண்மையான முயற்சிகளை மேற்கொண்டோம். அவரின் பெற்றோர் கூட முயன்றனர். ஆனால், மற்ற பயங்கரவாதிகள் அவரை சரணடைய விடவில்லை" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details