ஜெய்ப்பூர்:ராஜஸ்தான் மாநிலம் கரௌலி மாவட்டத்தின் சௌபே படா, வியானியா படா, கஜிபாடா, ஷாகஞ்ச், தக்கார் போத்தா மற்றும் பூர்ணாய் கச்சஹாரி ஆகிய வார்டுகளில் வசிக்கும் மக்களுக்கு அரசின் குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த குழாய்களில் டிசம்பர் 5ஆம் தேதி விநியோகம் செய்யப்பட்ட குடிநீரை குடித்த 124 பேருக்கு உடல்நிலை மோசமானது. அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சைப்பலனின்றி 12 வயது சிறுவனும், முதியவர் ஒருவரும் உயிரிழந்தனர்.
குடிநீர் குழாயில் கழிவுநீர் கலப்பு... 2 பேர் உயிரிழப்பு... 122 பேர் மருத்துவமனையில் அனுமதி... - ராஜஸ்தான் குடிநீர் குழாயில் கழிவுநீர்
ராஜஸ்தான் மாநிலத்தில் அசுத்தமான குடிநீரை அருந்திய 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பொது சுகாதாரத்துறை அலுவலர் மகேஷ் ஜோஷி கூறுகையில், "இந்த வார்டுகளில் வசிக்கும் மக்களுக்கு செல்லும் குடிநீர் குழாய்களில் கழிவுநீர் கலந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கழிவுநீர் கலந்த இடத்தை கண்டறியும் முயற்சியில் அலுவலர்கள் ஈடுபட்டுவருகின்றனர். இந்த வார்டுகள் மட்டுமல்லாமல், அந்த குழாய்கள் செல்லும் அனைத்து வார்டுகளிலும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட 122 பேரில் 63 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மீதமுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. உயிரிழந்தவர்களின் உடற்கூராய்வுக்கு பின்னரே முழுவிவரம் தெரியவரும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:400 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 8 வயது சிறுவன்