தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்களுக்கு கோவிட் பாதிப்பு - டெல்லியில் கரோனா பரவல்

கோவிட் மூன்றாம் அலையை சந்தித்துவரும் டெல்லியில் சுமார் ஆயிரத்து 700 காவலர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

COVID-19
COVID-19

By

Published : Jan 12, 2022, 2:38 PM IST

இந்தியாவில் ஒமைக்ரான் பரவல் காரணமாக கரோனா மூன்றாம் அலை தீவிரமடைந்துவருகிறது. அனைத்து மாநிலங்களிலும் தினசரி பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்துவருகிறது.

குறிப்பாக, தலைநகர் டெல்லியில் தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் மட்டும் 21,259 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் மூலம் டெல்லியில் சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 74 ஆயிரத்து 881ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் டெல்லியில் கடந்த பத்து நாள்களில் மட்டும் சுமார் ஆயிரத்து 700 காவலர்களுக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

எனவே, மூத்த அலுவலர்கள் நேரடி தொடர்பை தவிர்த்து காணொலி மூலமாக ஆலோசனை நடத்த டெல்லி காவல்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், பாதிப்புக்குள்ளாகிய காவலர்கள் அனைவரும் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:PM security breach: பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு

ABOUT THE AUTHOR

...view details