லடாக்: கிழக்கு லடாக்கில் கடந்த 2020ஆம் ஆண்டு இந்திய - சீன ராணுவத்தினரிடையே மோதல் ஏற்பட்டு வீரர்கள் உயிரிழந்தனர். இதன் காரணமாக எல்லைப்பகுதியில் இருநாடுகளும் படைகளைக் குவித்தனர். இதனால் பதற்றம் நிலவியது.
இந்த நிலைமையை சீராக்குவதற்காக இருநாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. இதன் விளைவாக பங்கோங் சோ ஏரி, கோக்ரா உள்ளிட்டப் பகுதிகளில் இருந்து இருநாட்டு ராணுவப்படைகளும் வெளியேறின. அதேநேரம் டெம்சோக், தேப்சாங் உள்ளிட்டப் பகுதிகளிலிருந்து படைகளை திரும்பப் பெற சீனா மறுத்து வருகிறது.
இந்நிலையில், இரு நாடுகளுக்கு இடையேயான 16ஆவது சுற்று பேச்சுவார்த்தை இன்று(ஜூலை 17) நடைபெற்று வருகிறது. இந்தியப் பகுதியான சுஷுல்-மோல்டோ எல்லை சந்திப்பில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா தரப்பில் ராணுவ கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் சென்குப்தா பங்கேற்றுள்ளார்.