ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆந்திராவில் ஐந்து நாள்களில் 153 பேருக்கு கறுப்புப் பூஞ்சை - ஆந்திராவில் கறுப்பு பூஞ்சை

ஆந்திர மாநிலத்தில் கடந்த ஐந்து நாள்களில் மட்டும் 153 பேருக்கு கறுப்புப் பூஞ்சை பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

black fungus cases
black fungus cases
author img

By

Published : Aug 3, 2021, 7:32 AM IST

அமராவதி: இது குறித்து அம்மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "ஆந்திர மாநிலத்தில் கடந்த ஐந்து நாள்களில் மட்டும் 153 பேருக்கு கறுப்புப் பூஞ்சை (மியூகோமைகோசிஸ்) பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அதன்படி பாதிப்பு எண்ணிக்கை நான்காயிரத்து 446 ஆக அதிகரித்துள்ளது. 14 பேர் உயிரிழந்துள்ளனர். சிகிச்சையில் 765 பேர் உள்ளனர். மூன்றாயிரத்து 267 பேர் குணமடைந்துள்ளனர்.

அவர்களில் இரண்டாயிரத்து 33 பேருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. குறிப்பாக குண்டூர், சித்தூர் மாவட்டங்களில் பாதிப்பு அதிகளவில் உள்ளது. குண்டூரில் கறுப்புப் பூஞ்சையால் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேற்கு கோதாவரி மாவட்டம், அதனையொட்டிய பகுதிகளில் தற்போது பாதிப்பு குறைந்துவருகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ராமநாதபுரத்தில் கறுப்புப் பூஞ்சை நோய்க்கு இரண்டாவது உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

author-img

...view details