தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

15 மணி நேர சோதனை... பார் மேக்கப் அறை கண்ணாடிக்குப் பின் ரகசிய பாதாள அறை... 17 பெண்கள் மீட்பு - பாரியில் இருந்து பெண்கள் மீட்பு

மும்பையில் அந்தேரி பகுதியில் உள்ள பாரில் காவல் துறையினர் சோதனை நடத்தியபோது, மேக்கப் அறை கண்ணாடிக்குப் பின் ரகசிய பாதாள அறையில், மறைத்து வைக்கப்பட்டிருந்த 17 பெண்களை காவல் துறையினர் மீட்டு, பார் மேலாளர் உள்பட 3 பேரை கைது செய்துள்ளனர்.

மும்பை அந்தேரி பகுதியில் உள்ள தீபா பாரில் சோதனை
மும்பை அந்தேரி பகுதியில் உள்ள தீபா பாரில் சோதனை

By

Published : Dec 13, 2021, 9:42 PM IST

மும்பை: அந்தேரி பகுதியில் தீபா பார் செயல்பட்டு வருகிறது. கரோனா கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டதாகவும், பெண்களை அடைத்து வைத்து நடனம் மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாகவும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று காவல் துறையில் புகார் அளித்தது.

அதன் அடிப்படையில் மும்பை காவல் துறையினர் சனிக்கிழமை (டிச.11) இரவு பாரில், அதிரடி சோதனை நடத்தினர். ஆனால், பாரில் சட்டவிரோதச் செயல்கள் நடப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை.

இதனால் குழம்பிப்போன காவல் துறையினர், தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர் பாரின் அனைத்து பகுதிகளிலும் சோதனை செய்தனர். பார் ஊழியர்கள் தொடர்ந்து மறுத்து வந்துள்ளனர்.

பாரில் உள்ள மேக்கப் அறையை சோதனை செய்த போது, சுவரின் மீது பதிக்கப்பட்டிருந்த கண்ணாடி வழக்கத்திற்கு மாறாக பெரிய அளவில் இருந்துள்ளது. அதை அகற்ற முயன்றுள்ளனர். ஆனால் முடியாமல் போகவே சந்தேகம் அடைந்த காவல் துறையினர் கண்ணாடியை உடைத்துள்ளனர். அப்போது அதில் பிரமாண்ட ரகசிய பாதாள அறை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மும்பை அந்தேரி பகுதியில் உள்ள தீபா பாரில் சோதனை

அந்த அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 17 பார் நடன மங்கைகள், மீட்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து பார் மேலாளர் உள்பட மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்து, பாருக்கு சீல் வைத்து மூடினர்.

15 மணி நேரம் நீடித்த சோதனையில் ரகசிய அறையில் பெண்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டு காவல் துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையும் படிங்க: 'நெற்றியில் பட்டை அடித்துக்கொண்டால் சேகர்பாபுவின் பழைய வரலாறு மறந்துவிடுமா?'

ABOUT THE AUTHOR

...view details