தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியை தொடர்ந்து காரைக்காலிலும் 144 தடை உத்தரவு! - நாளை கரையைக் கடக்கும் நிவர் புயல்

நிவர் புயல் காரைக்கால், மாமல்லபுரம் இடையே நாளை (நவம்பர் 25) கரையை கடக்க இருப்பதால், காரைக்காலில் நாளை காலை 10 மணி முதல் நாளை மறுநாள் (நவம்பர் 26) காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

karaikal
karaikal

By

Published : Nov 24, 2020, 9:34 PM IST

புதுச்சேரி: வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயல், அதிதீவிர புயலாக நாளை காரைக்கால், மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு, புதுச்சேரியில் பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில், புயல் அச்சுறுத்தல் காரணமாக, புதுச்சேரியில் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்திலும் நாளை காலை 10 மணி முதல் மறுநாள் (நவ.26) காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரியில் நாளை பொது விடுமுறை அளிக்கப்பட்டு, அதனை ஈடுசெய்யும் விதமாக டிசம்பர் 12ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:”நிவர் புயல் கரையைக் கடக்கும் வரை ஊரடங்கு அமல்படுத்த வேண்டும்” - பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details