தமிழ்நாடு

tamil nadu

ஆக்சிஜன் பற்றாக்குறையால் 14 பேர் மரணம்

By

Published : May 2, 2021, 11:39 AM IST

ஆந்திரா மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 14 நோயாளிகள் உயிரிழந்தனர்.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் 14 பேர் பலி
ஆக்சிஜன் பற்றாக்குறையால் 14 பேர் பலி

ஆந்திரா: கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நோயாளிகளுக்கும் போதிய ஆக்சிஜன் கிடைப்பதில்லை. இந்நிலையில், ஆந்திர அரசு மருத்துவமனையில் கரோனா தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து, ஆந்திரா ஆட்சியர் நிஷாந்த் குமார், சட்டப்பேரவை உறுப்பினர் அனந்த வெங்கடராமி ரெட்டி ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று கண்காணித்துவந்தனர்.

இது குறித்து வெங்கடராமிரெட்டி கூறுகையில், ’’மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுவருகிறது. இதற்கு முன்னதாகவே, நான் மருத்துவமனை அலுவலர்களை எச்சரித்தேன்.

தற்போது, இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.

இதையும் படிங்க: 'தேர்தல் ஆணையம் தனது தோல்வியை மறைக்க முடியாது'

ABOUT THE AUTHOR

...view details