சுக்மா நக்சல் தாக்குதல்: 22 ராணுவ வீரர்கள் வீர மரணம்! - Sukma Naxal attack
11:39 April 04
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் நடைபெற்ற என்கவுன்ட்டரில் 22 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா பகுதியில் உள்ள வனப் பகுதியில் நேற்று என்கவுன்ட்டர் நடத்தப்பட்டது. அப்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் மாவோயிஸ்டுகள் சிலர் உயிரிழந்திருக்கலாம் எனக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதேபோல், 22 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோப்ரா, மாவட்ட ரிசர்வ் படை, சிறப்பு அதிரடி படை ஆகியவை இணைந்து இந்த என்கவுன்ட்டரை நடத்தியுள்ளது.
மாவோயிஸ்ட்களின் கோட்டையாக கருதப்படும் சுக்மா, பிஜாப்பூர் ஆகிய பகுதிகளில் 2000க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு நக்சல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு அங்கமாக என்கவுன்ட்டர் நடத்திவருகின்றனர். இதுகுறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஸ் பாகலிடம் கேட்டறிந்தார்.