மத்திய பிரதேசம் மாநிலம், சாரணி மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி, வயலில் மின்மோட்டாரை அணைக்கச் சென்றுள்ளார். அப்போது அங்கு அமர்ந்திருந்த வயலின் உரிமையாளர், சிறுமி தனியாக இருப்பதைப் பயன்படுத்தி அவரிடம் தவறாக நடக்க முயன்றிருக்கிறார்.
சிறுமி அங்கிருந்து தப்பிக்க முயலவே அவரைக் காயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அவரை உயிருடன் எரித்துக் கொல்ல முயன்றிருக்கிறார். இதனிடையே, சிறுமியைக் காணவில்லை என அவரது பெற்றோர் வயலுக்கு தேடி வந்துள்ளனர். அங்கு பாறைகளுக்கு நடுவே எரிந்த நிலையில் சிறுமி உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ந்த சிறுமியின் பெற்றோர், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.