காஷ்மீரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசுப் பள்ளி ஆசிரியர் உள்ளிட்டோர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். ஒரு வாரகாலத்தில் ஏழு பேர் வரை படுகொலை செய்யப்பட்டது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து பயங்கரவாதிகளை தேடி வேட்டையாடும் பணி காவல்துறையினரால் தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் மண்டல காவல்துறை தலைவர் விஜயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.