தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் 13 கட்சிகள் பங்கேற்பு... தமிழ்நாட்டுல யார் யார் தெரியுமா? - சென்ட்ரல் விஸ்டா

அதிமுக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட 13 கட்சிகள் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்து கொள்கின்றன.

New Parliament
New Parliament

By

Published : May 25, 2023, 3:22 PM IST

டெல்லி : அதிமுக, ஆந்திராவின் ஒய்எஸ்ஆர், மகாராஷ்டிராவில் சிவசேனா ஏக்நாத் ஷிண்டே அணி என பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள 13 கட்சிகள் நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தலைநகர் டெல்லியில் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தில் ஏறத்தாழ 970 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டுள்ளது. மே. 28ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசு தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து இருந்த நிலையில் அதை மத்திய அரசு நிராகரித்துவிட்டது.

அதைத் தொடர்ந்து புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக 19 எதிர்க்கட்சிகள் தெரிவித்தன. காங்கிரஸ், திமுக, விசிக, மதிமுக, ஆம் ஆத்மி, சிவ சேனாவின் உத்தவ் தாக்கரே அணி, சமாஜ்வாதி கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்கட்சிகள் இணைந்து புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக கூட்டாக அறிக்கை வெளியிட்டன.

அதேநேரம் ஆந்திரா பிரதேச முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, பிஜு ஜனதா தள தலைவரும், ஒடிசா முதலமைச்சருமான நவீன் பட்நாயாக், உள்ளிட்டோர் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்தனர். அவர்களையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 13 கட்சிகள் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் கலந்து கொள்ள திட்டமிட்டு உள்ளன.

தமிழகத்தில் திமுக எதிர்ப்பு முகம் காட்டினாலும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஆதரவு கரம் நீட்டி உள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் அதிமுக கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதிமுகவை தொடர்ந்து, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் விழாவில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

ஆந்திராவை ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஒடிசாவின் பிஜூ ஜனதா தளம், மகாராஷ்டிராவில் சிவசேனா ஏக்நாத் ஷிண்டே அணி, மேகாலயாவின் தேசிய மக்கள் கட்சி நாகாலாந்தின் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி, சிக்கிம் மாநிலத்தின் சிக்கிம் கிராந்திகாரி மோர்சா, மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த ராஷ்டீரிய லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகள் விழாவில் கலந்து கொள்கின்றன.

அதேபோல் உத்தரபிரதேசத்தை சேர்ந்த அப்னா தல் (சோனேலால் அணி), இந்திய குடியரசுக் கட்சி, அனைத்து ஜார்கண்ட் மாநில மாணவர்கள் யூனியன், மிசோரத்தை சேர்ந்த மிசோ தேசிய முன்னணி, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, ஷிரோமணி அகாலி தளம் உள்ளிட்ட 13 கட்சிகள் இந்த நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளை தொடர்ந்து இந்திய மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியும் நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க :தமிழ் ஒவ்வொரு இந்தியரின் மொழி - டெல்லி திரும்பிய பிரதமர் மோடி பேச்சு

ABOUT THE AUTHOR

...view details