புதுடெல்லி:நடப்பாண்டில் ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்கியுள்ள நிலையில், சர்வதேச தலைவர்கள் கலந்து கொள்ளும் ஜி20 உச்சி மாநாடு இன்றும் (செப். 9) நாளையும் (செப். 10) தலைநகர் டெல்லியில் நடைபெறுகிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இம்மாநாடு, டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறுவதால், பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள், பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா வந்துள்ளனர்.
சக்தி வாய்ந்த மற்றும் பொருளாதார ஆளுமைகளை உறுப்பு நாடுகளாக கொண்டிருக்கும் இந்த ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு ஒவ்வொரு ஆண்டும் உறுப்பு நாடுகளில் நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு இந்தியாவில் நடத்தப்படுகிறது. இந்தியாவில் ஜி20 மாநாடு நடைபெறுவது இதுவே முதல்முறை ஆகும். ஆகையால் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் நகரம் முழுவது கோலாகலமாக நடைபெற்று, பாதுகாப்பு பணிகளும் வலுப்படுத்தப்பட்டு உள்ளன.
இந்நிலையில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள், பிரதிநிதிகள் மாநாட்டிற்கு விரைந்து, மாநாடானது சிறப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும், மாநாட்டில் பங்கேற்கும் அனைவருக்கும் கவனிப்பு ஏற்பாடுகள் பார்த்து, பார்த்து செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று இரவு விருந்தானது குடியரசுத் தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவனில் (Rashtrapati Bhavan) பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.