டெல்லியின்சீலம்பூரில் உள்ள மருத்துவமனையில் செப்டம்பர் 18ஆம் தேதி 12 வயது சிறுவன் உடலில் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டான். அந்த சிறுவனை பரிசோதித்த மருத்துவர் சந்தேகமடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதனடிப்படையில் போலீசார் மருத்துமனைக்கு விரைந்து சிறுவனின் பெற்றோரிடம் விசாரணையில் ஈடுபட்டனர். ஆனால், அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதனிடையே இன்று(அக்.01) காலை சிறுவன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தான்.
நண்பர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 12 வயது சிறுவன் உயிரிழப்பு - பாலியல் வன்கொடுமை
டெல்லியில் 3 சிறுவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 12 வயது சிறுவன் உயிரிழந்தான்.
அதன்பின் சிறுவனின் தாய் போலீசாரிடம், செப்டம்பர் 18ஆம் தேதி தனது மகனை அவனது நண்பர்கள் மூன்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதோடு கடுமையாக தாக்கியதாகவும் தெரிவித்தார். குறிப்பாக அந்த 3 பேரின் பெற்றோர் தங்களிடம் போலீசில் சொல்ல வேண்டாம் என்று கூறியதாகவும், மருத்துவ செலவை பார்த்துகொள்வதாகவும் தெரிவித்திருந்தனர். இப்போது என் மகன் உயிரிழந்துவிட்டான் என்று தெரிவித்தார். அதனடிப்படையில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. கிளீனர் போக்சோவில் கைது...!