தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியாவில் முதல்முறையாக சிறுவர்களுக்கு தடுப்பு மருந்து - ஜைடஸ் கெடிலா

இந்தியாவில் ஊசியில்லா கரோனா தடுப்பு மருந்தான ஜைகோவ்-டியை சிறுவர்களுக்கு பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 to 18 years covid vaccine in india
12 to 18 years covid vaccine in india

By

Published : Sep 14, 2021, 5:26 PM IST

டெல்லி:இந்தியாவின் புகழ்பெற்ற மருந்து தயாரிப்பு நிறுவனமான ஜைடஸ் கெடிலா, ஊசியில்லா கரோனா தடுப்பு மருந்தான ஜைகோவ்-டியை தயாரித்துள்ளது. இந்த மருந்தை மொத்தம் மூன்று டோஸ்களாக செலுத்திக்கொள்ளலாம்.

இதை 28, 56 நாள்கள் இடைவெளியில் செலுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக இதனை 12 வயது முதல் 18 வரையான வயதினருக்கு பயன்படுத்தலாம். இந்த மருந்தை அவசர காலத்துக்கு பயன்படுத்திக்கொள்ள இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஆகஸ்டு 20ஆம் தேதி அனுமதி அளித்தது.

இதுகுறித்து ஜைடஸ் கெடில்லா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஷர்வில் படேல், "ஜைகோவ்-டி தடுப்பு மருந்து விநியோகம் இந்த மாதம் தொடங்கப்படும். பொதுமக்களுக்கு அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து தடுப்பூசி கிடைக்கும்" எனத் தெரிவித்தார்.

ஜைகோவ்-டி தடுப்பு மருந்து பிளாஸ்மிட் டிஎன்ஏ கொண்ட மருந்தாகும். பிளாஸ்மிட் டிஎன்ஏ மருந்தை ஜைடஸ் கெடிலா நிறுவனம் மட்டுமே தாயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மெகா தடுப்பூசி முகாம் - இலக்கை கடந்து சாதனை

ABOUT THE AUTHOR

...view details