தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

திருமண விழாவின் போது கிணற்றில் விழுந்து 13 பேர் உயிரிழந்த சோகம் - உத்தரப்பிரதேசத்தில் சோகம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று(பிப். 16) நடைபெற்ற ஹல்டி நிகழ்ச்சியின் போது ஒரே குடும்பத்தை சேர்ந்த பெண்கள் குழந்தைகள் உட்பட 13 பேர் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருமண விழாவில் கிணற்றில் விழுந்து 13 பேர் பலி- உத்தரப்பிரதேசத்தில் சோகம்!
திருமண விழாவில் கிணற்றில் விழுந்து 13 பேர் பலி- உத்தரப்பிரதேசத்தில் சோகம்!

By

Published : Feb 17, 2022, 11:19 AM IST

Updated : Feb 17, 2022, 12:04 PM IST

குஷிநகர் (உத்தரப்பிரதேசம்): உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரில் உள்ள நெபுவா நௌரங்கியா காவல்நிலையத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியில் பரமேஷ்வர் குஷ்வாகா என்பவரது இல்லத்தில் திருமண நிகழ்வு நடைபெற்றுள்ளது. விழாவில் கலந்து கொண்ட 13 பெண்கள் அங்கு உள்ள கிணற்றில் தவறி விழுந்துள்ளனர்.

இரவு 10 மணி அளவில் கிணற்றின் மேற்சுவரில் அந்த 13பெண்களும் அமர்ந்து நிகழ்ச்சியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது கிணற்றின் சுவர் பாரம் தாங்காமல் இடிந்து விழுந்து அனைவரும் கிணற்றுக்குள் தவறி விழுந்தனர். இந்த நிகழ்ச்சியில் 50-60 பெண்கள் கலந்து கொண்டனர்.

குஷிநகரின் மாவட்ட ஆட்சியர் எஸ் ராஜலிங்கம் கூறுகையில், தற்செயலாகக் கிணற்றில் தவறி விழுந்ததில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. திருமண நிகழ்ச்சியின் போது சிலர் கிணற்றின் பலகையில் அமர்ந்திருந்தபோது, அதிக பாரம் ஏற்றியதால், பலகை உடைந்து விழுந்தது. இறந்தவர்களின் குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

உபி முதலமைச்சர் இரங்கல்

தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இரங்கல்

இந்த விபத்திற்கு உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். உடனடியாக மீட்புப் பணிகளைத் தீவிரப் படுத்தவும் நிவாரண உதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:கர்நாடகாவில் கல்லூரிகள் திறப்பு: ஹிஜாபுக்கு மறுப்பு!

Last Updated : Feb 17, 2022, 12:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details