ஹைதராபாத்: ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனியாக தெலங்கானா மாநிலம் உருவான பின்னர் முதன்முறையாக காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில் இன்று ஹைதராபாத்தில் உள்ள எல்.பி.ஸ்டேடியத்தில் நடந்த விழாவில் தெலங்கானா முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி பதவியேற்றார்.
மேலும் அவருடன் 11 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். தெலங்கானா மாநில அளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் முதல்முறையாக ஆட்சியை கைப்பற்றி இருக்கும் நிலையில் காங்கிரசின் முக்கிய தலைவர்கள் பலரும் இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். மேலும், தெலங்கானா முதலமைச்சராக பொறுப்பேற்ற ரேவந்த் ரெட்டிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
தெலங்கானா முதலமைச்சர் ரேசில் நான்கு பேர் இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் அதில் பெரிதும் எதிர்பார்க்க பட்ட பாட்டி விக்ரமார்காவை துணை முதலமைச்சராக மாற்றி விவாதங்களுக்கு காங்கிரஸ் தலைமை முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இன்று அமைச்சரவை பொறுப்பேற்றுக் கொண்டவர்கள் விவரம் பின்வருமாறு,
உத்தம் குமார் ரெட்டி - உள்துறை அமைச்சர்
கோமதி ரெட்டி வெங்கட் ரெட்டி - நகராட்சி அமைச்சர்
ஸ்ரீதர் பாபு - நிதி அமைச்சர்
பொங்குலேட்டி ஸ்ரீனிவாஸ் ரெட்டி - நீர் மற்றும் வடிகால் துறை அமைச்சர்