புது டெல்லி : 2019 முதல் 2021ஆம் வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவில் 108 பேரை புலி அடித்து கொன்றுள்ளது. இந்தத் தகவலை மத்திய வனத்துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சௌபே மக்களவையில் தெரிவித்தார்.
இது குறித்து அவர், “இந்தியாவில் மொத்தம் 108 பேர் புலி தாக்குதலால் இறந்துள்ளனர், அதிகபட்ச இறப்புகள் மகாராஷ்டிராவில் நிகழ்ந்துள்ளன. 2021 ஆம் ஆண்டில் புலி தாக்குதலால் இறந்த 14 இறப்புகளில், மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேசத்தில் தலா 5 பேர், பிகாரில் 3 பேர் மற்றும் உத்தரகாண்டில் ஒருவர் ஆவார்கள்.
2019 மற்றும் 2021க்கு இடைப்பட்ட காலத்தில், மகாராஷ்டிராவில் புலி தாக்குதல்களால் 56 இறப்புகள் பதிவாகியுள்ளன. அதில், 2019இல் 26, 2020 இல் 25 மற்றும் 2021 இல் 5 ஆகும். இதற்கு அடுத்த இடத்தில் உள்ள உத்தரபிரதேசத்தில், 17 இறப்புகள் நிகழ்ந்துள்ளன. அதன்படி, 2019 இல் எட்டு, 2020 இல் நான்கு மற்றும் 2021 இல் ஐந்து ஆகும்.