தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுவையில் புதிதாக 1,021 பேருக்குக் கரோனா உறுதி! - புதுவை கரோனா விவரங்கள்

புதுச்சேரி: கரோனா பாதிப்பு இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 21 நபர்களுக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

1,021 new corona cases in Pondicherry
1,021 new corona cases in Pondicherry

By

Published : Apr 27, 2021, 4:53 PM IST

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 781 நபர்களுக்கும், காரைக்காலில் 108 நபர்களுக்கும், மாஹேவில் 59 நபர்களுக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது 7 ஆயிரத்து 828 நபர்கள் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், 46 ஆயிரத்து 448 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், புதுச்சேரியில் 13 நபர்கள் உயிரிழந்ததால் மாநிலத்தில் கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 771 ஆக உயர்ந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக, மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 55 ஆயிரத்து 47 ஆக உள்ளது. புதுச்சேரியில் கரோனாவால் ஒரே நாளில் ஆயிரத்து 21 பேர் பாதிக்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறையாகும் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details