டெல்லி:தொலைத் தொடர்பு துறையில் அமைப்பு மற்றும் செயல்முறை சீர்திருத்தங்களுக்கு பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை இன்று (செப்.15) ஒப்புதல் அளித்துள்ளது
இந்த சீர்திருத்தங்கள் வேலை வாய்ப்பை உருவாக்கும், பணப்புழக்கத்தை அதிகரிக்கும், முதலீட்டை ஊக்குவிக்கும், தொலை தொடர்பு சேவை அளிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா காலத்தில் ஆன்லைன் கல்வி, வீட்டிலிருந்தே பணியாற்றுதல், காணொலி கூட்டம் ஆகியவற்றால் இணையதள டேட்டா பயனாளர்கள் அதிகரித்துள்ளதால் இந்த சீர்திருத்த நடவடிக்கைகள், பிராட் பேண்ட் வேகம், தொலை தொடர்பு சேவையை மேலும் மேம்படுத்தும்.