நாட்டில் கரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ளது. நாள்தோறும் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தைத் தாண்டுகிறது. சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதால், மருத்துவ உபகரணங்களுக்குப் பல இடங்களில் மருத்துவத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, ஆக்சிஜன் சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக உயர்மட்ட அலுவலர்கள் நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தில், பாதிப்புகள் அதிகம் இருக்கும் மாநிலங்களுக்குத் தேவையான அளவு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாநிலங்களுக்கும் தடையின்றி ஆக்சிஜன் விநியோகம் விநியோகிக்கப்படுகிறதா என்பதை ஆய்வுக்குழு ஒன்று, கண்காணித்துவருவதாகச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. குஜராத், கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட 12 மாநிலங்களுக்கு அதிகப்படியான கரோனா பாதிப்புகள் பதிவாகுவதால், ஆக்சிஜன் விநியோகம் தேவை அதிகரித்துள்ளது. பல நேரங்களில், அதனைப் பூர்த்திசெய்ய இயலாமல் ஆகுகிறது.