தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லியில் மேலும் 2 பேருக்கு ஒமைக்ரான் - Omicron in india

டெல்லியில் மேலும் 2 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.

10 Omicron cases detected in Delhi
10 Omicron cases detected in Delhi

By

Published : Dec 16, 2021, 7:48 PM IST

டெல்லி:தென் ஆப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட ஒமைக்ரான் தொற்று போட்ஸ்வானா, ஹாங்காங், சீனா, ஜப்பான், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அதிவேகமாக பரவிவருகிறது. இதுவரை 55க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியதால் மக்கள் பீதியில் உள்ளனர்.

இந்தியாவில், 75 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், டெல்லியில் இன்று மேலும் 2 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லியில் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை ஒன்பது பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருக்கலாம் என முதற்கட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளது. அதில் ஒருவருக்கு நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இரண்டு டோஸ் தடுப்பூசி ஒமைக்ரானுக்கு எதிராக செயல்படாது என்று சுகாதாரத்துறை தெரிவித்துவருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:வேகமாகப் பரவும் ஒமைக்ரான்... தமிழ்நாட்டில் ஒன்பது பேருக்கு பாதிப்பு?

ABOUT THE AUTHOR

...view details