ஐஸ் விற்பனை செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர்! - lok sabha election 2024 - LOK SABHA ELECTION 2024
Published : Apr 12, 2024, 6:14 PM IST
தருமபுரி: நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தங்களது பிரச்சாரத்தைத் தீவிரப் படுத்தி வருகிறது.
இந்த நிலையில், தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆ.மணியை ஆதரித்து கிழக்கு மாவட்டச் செயலாளர் தடங்கம் சுப்பிரமணி தலைமையில் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட பாளையம், தண்டு காரம், ஐருகு, கோம்பை உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் நடைபெற்றது.
அப்போது பொதுமக்களிடம் பேசிய வேட்பாளர் ஆ.மணி, "நான் வெற்றி பெற்றால் இப்பகுதியில் உள்ள வேலைவாய்ப்பு பிரச்சனையைத் தீர்க்க சிப்காட் அமைப்பேன். அதேபோல் தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்க உபரி நீர் திட்டத்தைச் செயல்படுத்துவேன் என வாக்குறுதிகளைக் கொடுத்து பிரச்சாரம் செய்தார். வேட்பாளர் ஆ.மணியை ஆரத்தி எடுத்தும் பூக்கள் தூவியும் உற்சாகமாகப் பொதுமக்கள் வரவேற்றனர்.
மேலும், பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட வேட்பாளர் ஆ.மணி ஐஸ் விற்பனை செய்து வாக்கு சேகரித்தார். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்வின் போது திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.