சென்னை: சென்னை கொடுங்கையூர் பகுதியில் இரவு நேரங்களில் கஞ்சா விற்கப்படுவதாக கொடுங்கையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில், நேற்று கொடுங்கையூர் போலீசார் எம்.ஆர் நகர் சந்திப்பு அருகே சந்தேகத்திற்கு இடமான பெண் ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர்.
அப்போது அவரிடம் சிறுசிறு பொட்டலங்களாக கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், கொடுங்கையூர் இந்திரா காந்தி நகர் பகுதியை சேர்ந்த வினோதினி (28) என்பதும், இவர் மீது ஏற்கனவே நான்கு கஞ்சா வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது.