தேனி: தேனி மாவட்டம் சின்னமனூர் அடுத்த குச்சனூர்-சங்கராபுரம் இணைப்புச்சாலை அருகே, வனப்பகுதியில் கடந்த 6ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றிய சின்னமனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், உயிரிழந்தவர் போடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள உப்புக்கோட்டையை அடுத்த மாணிக்காபுரத்தைச் சேர்ந்த சென்றாயன் (39) என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இதன் தொடர்ச்சியாக, இந்த கொலை தொடர்பாக சென்றாயன் மனைவி பூங்கொடி (33) மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதையடுத்து அவரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.
இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், "சென்றாயன் பந்தல் போடும் கூலி வேலை செய்து வந்துள்ளார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான அவர் தினசரி வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். கடந்த மாதம் குடித்துவிட்டு தனது வீட்டுக்கு அருகில் உள்ள வீட்டில் புகுந்து பாத்திரங்களை அடித்து நொறுக்கியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் வீரபாண்டி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.
இந்த புகாரின் பேரில் போலீசார் சென்றாயனை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 4ஆம் தேதி சிறையிலிருந்து வீட்டுக்கு வந்த சென்றாயன், வீட்டில் மனைவி இல்லாததைக் கண்டு குச்சனூர்-சங்கராபுரம் இணைப்புச் சாலையில் தனியார் தென்னந்தோப்பில் வசித்து வரும் தனது மாமனார் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
இதையும் படிங்க:சாதியை சொல்லி திட்டிய கூட்டுறவு சங்க அதிகாரி?.. அலைக்கழித்த போலீசுக்கு வந்த உத்தரவு - தூத்துக்குடியில் நடப்பது என்ன?