விருதுநகர்:சிவகாசியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர் கடந்த 2023 ஆம் ஆண்டு திண்டுக்கல்லில் உள்ள ஸ்ரீராம் ஆட்டோமால் பிரைவேட் லிமிடெட் என்ற பழைய வாகனம் விற்பனை செய்யும் நிறுவனத்தில் மஹிந்திரா பொலிரோ ஜீப், 2,66,136 ரூபாயை செலுத்தி ஏலத்தில் எடுத்துள்ளார்.
வாங்கிய ஜீப்பில் பழுது ஏதும் உள்ளதா? என சிவகாசியில் உள்ள மெக்கானிக்கிடம் கொடுத்து சோதித்தபோது, அந்த ஜீப்பினுடைய எஞ்சின் அதற்கு உடையது இல்லை எனவும் மற்றொரு வாகனத்தினுடைய என்ஜின் எனவும் மெக்கானிக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜீப் வாங்கிய நிறுவனத்திடம் கேட்டபோது முறையான பதில் அளிக்காததால், இது தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிமன்றத்தில் முத்துகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்தார்.