வேலூர்:சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை வழியாக பெங்களூர், மும்பை, கோவா, சூரத், அகமதாபாத் உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு சென்று வர முடியும்.
அதேபோல் தமிழகத்தின் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்ல இந்த சாலை பெரிது பயன்படுகிறது. இதனைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்ளும் சிலர், சட்டவிரோதமாகத் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, கஞ்சா உள்ளிட்ட பொருள்களை இந்த சாலை வழியாக கடத்தி வருகின்றனர்.
ஆனால் இதனை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் போலீசார், கடத்தப்படும் பொருள்களைப் பறிமுதல் செய்வதுடன், குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று குட்கா உள்ளிட்ட பொருள்கள் கடத்தி வரப்படுவதாக பள்ளிகொண்டா போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
போலீசார் வசூல் வேட்டை?இதனையடுத்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், அவ்வழியாக வரும் வாகனங்களைத் தீவிர சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார். மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே 2 போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.