தமிழ்நாடு

tamil nadu

“ஊரைவிட்டு தள்ளி வைக்கிறாங்க”- காலி பானைகளுடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்! - guduyatham Moongapattu caste issue

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 16, 2024, 10:48 PM IST

Vellore Moongapattu Caste Issue: வேலூர் மாவட்டம், குடியாத்தம் மூங்கப்பட்டு பகுதியில் தங்களை ஊரைவிட்டு தள்ளிவைத்து பிரித்து பார்ப்பதாக பாதிக்கப்பட்ட சமூக மக்கள் காலி பானைகளுடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் ஆட்சியர் அலுவலகம், மனு அளிக்கும் கிராமத்தினர்
வேலூர் ஆட்சியர் அலுவலகம், மனு அளிக்கும் கிராமத்தினர் (Credits- ETV Bharat Tamil Nadu)

வேலூர்:வேலூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று குறை தீர்ப்பு மையம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று குடியாத்த மூங்கப்பட்டு பகுதியில் வசிக்கும் ஒரு சமுதாயத்தினர் தங்கள் சமுகத்தை சேர்ந்த சுமார் 30 குடும்பத்தினர் இந்த கிராமத்தில் வசித்து வரும் நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த மாற்று சமுதாயத்தினர் எங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.

இது குறித்து ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி அந்த சமுகத்தினர் காலி பானைகளுடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றிகையிட்டு போரட்டம் நடத்த முயற்சி செய்தனர். இதனை கண்ட காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி முக்கிய நிர்வாகிகளை மட்டும் ஆட்சியரிடம் மனு அளிக்க உள்ளே அனுமதித்தனர்.

பின் இவர்கள் தியாகராஜன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமியை நேரில் சந்தித்து மனு அளித்தனர். இதுகுறித்து பேசிய மூங்கப்பட்டு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தியாகராஜன் கூறுகையில், “எனக்கு சொந்தமான நிலத்தில் கிராமத்தை சேர்ந்தவர்கள் சுடுகாட்டிற்கு பாதை அமைக்க முயல்வதாகவும், இதுகுறித்து புகார் அளித்த நிலையில் வழக்கு தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில் அக்கிராமத்தை சேர்ந்த மாற்று சமுதாயத்தினர் யாரும் இந்த 30 குடும்பங்களை சேர்ந்தவர்களுடன் எந்த வேலையும் செய்ய கூடாது.

இதையும் படிங்க:“திருச்சி எஸ்பி சாதிய ரீதியான குற்றச்சாட்டுகள் வைப்பவர் இல்லை என நிருப்பிக்கச் சொல்லுங்கள்”- நாதக ஆவேசம்!

மேலும் எங்களுடன் பொது பாதையைக் கூட பயன்படுத்த கூடாது என பல்வேறு வேறுபாடுகள் பிரித்து ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். இவ்வாறு அவர்கள் நடந்து கொள்ளுவதை ஆட்சியர் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கியமாக ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கும் முறைக்கு தடை விதிக்குமாறு கோரியுள்ளனர். இது குறித்து ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details