தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“விபத்தில்லா பட்டாசு உற்பத்திக்கு அடித்தளம்” - சிவகாசியில் மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி பேச்சு! - union minister suresh gopi - UNION MINISTER SURESH GOPI

Union minister Suresh Gopi: பட்டாசு தொழிலில் புது சிந்தனைகளை புகுத்தி விபத்தில்லா, மாசில்லா பட்டாசை உருவாக்க தமிழ் பண்பாட்டை நேசிக்கும் மலையாளி மகனாக வாதிடுவேன் என மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.

மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி
மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 13, 2024, 7:45 PM IST

Updated : Aug 13, 2024, 9:16 PM IST

விருதுநகர்: சிவகாசியில் மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை சார்பில், பட்டாசு தொழிலில் பாதுகாப்பு குறித்த பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கலந்துரையாடல் கூட்டம், நாக்பூர் மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாடு முதன்மை அதிகாரி பி.குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி கலந்து கொண்டு, பட்டாசு உற்பத்தியாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.

மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்தக் கூட்டத்தில் உற்பத்தியாளர்கள் தரப்பில் பட்டாசு தொழிலை பாதுகாப்பது சம்பந்தமாக பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. பின்னர், பட்டாசு ஆலைகளுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், தொழிலாளர்களின் பாதுகாப்பில், அவர்களது ஆரோக்கியத்தில் உற்பத்தியாளர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

முன்னதாக, செய்தியாளர்களைச் சந்தித்து இணை அமைச்சர் சுரேஷ் கோபி கூறியதாவது, “பட்டாசு விற்பனை பொருளாதார முன்னேற்றத்திற்கு முதன்மை பெறுகிறது. பட்டாசு தொழில் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பை தருகிறது என்பதெல்லாம் முக்கியம் என்பதை பொறுத்து பட்டாசு தொழில் முதன்மை பெறுகிறது. பட்டாசுத் தொழிலில் புது சிந்தனைகளை புகுத்தி விபத்தில்லா பட்டாசு, மாசில்லா பட்டாசை உருவாக்க அடித்தளம் அமைக்கும் களம் அமைக்கப்பட்டுள்ளதாக நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், இன்று நடைபெற்ற கலந்துரையாடலை ஆவணப்படுத்தி மத்திய அமைச்சர் பியூஸ் கோயலிடம் ஒப்படைத்து, பட்டாசு தொழிலை தொடர்ந்து பாதுகாக்க, தமிழ்நாட்டை தமிழ் பண்பாட்டை நேசிக்கும் ஒருவனாக மலையாளத்தின் மகனாக அவரிடம் இத்தொழிலை பாதுகாக்க முயற்சி செய்வேன்” இவ்வாறு அவர் கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:வயிற்றில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா?. தருமபுரியில் மேலும் ஒரு கும்பல் கைது.. கர்ப்பிணிகள் உஷார்..!

Last Updated : Aug 13, 2024, 9:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details