சென்னை: சென்னை விருகம்பாக்கம் இளங்கோ நகரைச் சேர்ந்த ரஞ்சித் (19) மற்றும் ஆகாஷ் (29), சாலிகிராமம் சக்தி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த வெற்றிவேல் (27), சாலிகிராமம் மதியழகன் நகரைச் சேர்ந்த சற்குணம் (28) ஆகியோர் கோயம்பேட்டில் மூட்டை துாக்கும் தொழில் செய்து வருகின்றனர்.
மூட்டை தூக்குவதில் தொழில் போட்டி:இவர்களுக்குள் மூட்டை தூக்குவதில் தொழில் போட்டி இருந்துள்ளது. இந்நிலையில், இவர்கள் அனைவரும் நேற்று வேளச்சேரியில் லோடு இறக்கி விட்டு, கோயம்பேடு ஏ சாலையில் உள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்தியுள்ளனர்.
அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்னை எழுந்துள்ளது. பின்னர் வெளியே வந்த போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த வெற்றிவேல் மற்றும் சற்குணம் இருவரும் சேர்ந்து, ரஞ்சித் மற்றும் ஆகாஷ் ஆகிய இருவரையும் இரும்பு ராடால் தலையில் அடித்து லோடு வேனில் ஏற்றியுள்ளனர். அப்போது லோடு வேனில் இருந்த நபர் ஒருவர், கத்தியால் ரஞ்சித்தை வெட்ட முயன்றுள்ளார். அவர் கத்தியைப் பிடிக்கவே, ரஞ்சித்தின் இடது கை ஆள்காட்டி விரலுக்கு இடையே வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது.